அடக் கொடுமைக்காரா: பெண்ணை வெட்டி வீடியோ எடுத்த சைக்கோ!
கோடரியால் பெண்ணின் கழுத்தை பல முறை வெட்டிக் கொன்று, அதை, வீடியோ எடுத்தவன் போலீசில் சரண் அடைந்த சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் லுாதியானா மாவட்டத்தைச் சேர்ந்த பெண், சரப்ஜித் கவுர் (40). சில நாட்களுக்கு முன் தன் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த அவரை, அதே பகுதியை சேர்ந்த மணீந்தர் சிங் என்பவன் திடீரென கோடரியால் கழுத்தில் வெட்டினான். இதில் நிலைகுலைந்த சரப்ஜித் கவுர், ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார். தொடர்ந்து கழுத்திலும், மார்பிலும் வெறி கொண்டு வெட்டிய மணீந்தர் சிங், அதை தனது செல்ஃபோனில் படம் பிடித்தான். சரப்ஜித் கவுரையும், தன்னையும் வீடியோவும் எடுத்த அவன், போலீஸ் ஸ்டேஷனில் சரண் அடைந்தான்.
தனது கள்ளக்காதலை தெரிந்து கொண்ட சரப்ஜித், பிளாக்மெயில் செய்ததாகவும், அதனால், அவரை கொலை செய்ததாகவும் போலீசாரிடம் தெரிவித்துள்ளான் மணிந்தர். இந்த கொடூர சம்பவம் பஞ்சாபில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.