நீதிமன்ற வளாகத்திலேயே மனைவிக்கு முத்தலாக் சொன்ன கணவன்

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவிக்கு முத்தலாக் சொன்ன கணவன்
நீதிமன்ற வளாகத்திலேயே மனைவிக்கு முத்தலாக் சொன்ன கணவன்

நீதிமன்ற வளாகத்திலேயே மனைவிக்கு கணவன் மூன்று முறை தலாக் கூறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

முத்தலாக் முறையை தடை செய்யும் மசோதா அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் அது சட்டமாகவும் மாறியுள்ளது. அதன்படி, இஸ்லாமிய பெண்களை அவர்களின் கணவர்கள் தலாக் கூறி விவாகரத்து செய்தால், சட்டப்படி நடவடிக்கைப்படும் எடுக்கப்படும். இந்நிலையில் சட்டத்தை மீறி நீதிமன்ற வளாகத்திலேயே மனைவிக்கு கணவர் முத்தலாக் கூறிய சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் ஆக்ரா நகரத்தில் நிகழ்ந்துள்ளது.

உத்தரப் பிரதேசத்தின் ஷாக்ஞ் பகுதியை சேர்ந்த பெண் நக்மா பானோ. இவருக்கும் ஆஃபாக் குரோஷி என்பவருக்கும் கடந்த 2014ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. பெண் குடும்பத்தினரிடம் இருந்து புதிய கார், பைக் மற்றும் லட்சக்கணக்கானா ரூபாய்க்கு நகைகளையும் ஆஃபாக் பெற்றதாக கூறப்படுகிறது. ஆனால் தனக்கு மேலும் பணம் வேண்டும் என மனைவியிடம் அவர் கேட்டு வந்துள்ளார். அத்துடன் வீட்டிலிருந்து பணம் வாங்கி வருமாறு தனது மனைவியை கட்டையால் அடித்துள்ளார். இதுதொடர்பாக வக்பு வாரிய தலைவரிடம் நக்மா புகார் தெரிவித்துள்ளார். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப்படுகிறது.

இதையடுத்து காவல்நிலையத்தின் உதவியை நாடியுள்ளார் நக்மா. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் ஆக்ராவில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீதிமன்ற வளாகத்திற்கு செல்லும் வழியில் நக்மா மற்றும் அவரது தந்தையை தனது உறவினர்களுடன் வழிமறித்த ஆஃபாக் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் நீதிமன்ற வளாகத்திலேயே மூன்று முறை தலாக் கூறியுள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com