tattoo person
tattoo personinsta

உதட்டில் காதலியின் பெயர்... டாட்டூவாகப் போட்டு இணையத்தை திரும்பி பார்க்கவைத்த நபர்! viral video

உதட்டில் காதலியின் பெயரை, டாட்டூவாகப் போட்ட நபர், இணையத்தில் வைரலாகி வருகிறார்.
Published on

பழங்காலத்தில் ‘பச்சை குத்துதல்’ என்று சொல்லப்பட்ட ஒரு கலை, இன்று நவீன வளர்ச்சியின்மூலம் ‘டாட்டூ’ என்ற பெயரில் இளைய தலைமுறையினரை ஆட்கொண்டு வருகிறது. டாட்டூவை, ஆண்களை மட்டுமல்லாது. இன்றைய இளம்பெண்களும் விரும்பிப் போட்டுக் கொள்கிறார்கள். இந்த வண்ணவண்ண டாட்டூக்களின் வருகை, இன்றைய இளம்தலைமுறையின் புதிய ஃபேஷனாக மாறிவிட்டது என்றே சொல்லலாம். அதிலும் சிலர் உடலில் எங்காவது ஓர் இடத்தில் மட்டும் போட்டுக் கொள்கிறார்கள். ஆனால், ஒருசிலர் உடல் முழுவதும் போட்டுக் கொள்கிறார்கள். எனினும், இளைஞர்கள் மத்தியில் இந்த டாட்டூ கலாசாரம் அழகும், அன்பும் சார்ந்த விஷயமாகப் பார்க்கப்படுகிறது. இதில் ஒருசிலர் காதலி, மனைவி, தாய், வெற்றி, விஷேசம் ஆகியவற்றைக் குறிக்கும் வகையில் டாட்டூ போட்டுக் கொள்கின்றனர்.

அந்த வகையில், நபர் ஒருவர் தனது கீழ் உதட்டில் காதலியின் பெயரை டாட்டூவால் போட்டு இணையத்தில் கவனம் பெற்றுள்ளார். அந்த நபர், தன் காதலியின் பெயரான ‘அம்ருதா’ என்பதை டாட்டூவாகப் போட்டுள்ளார். இந்த வீடியோதான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை, டாட்டூ ஆர்ட்டிஸ்ட் அபிஷேக் சப்கல் என்பவர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதுதான் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோ 9 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருந்தாலும், பலரும் இதுகுறித்து கருத்துகளைப் பதிவிட்டு விமர்சனம் செய்து வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com