\
கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு..! சோதனையில் உறுதியானது

கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு..! சோதனையில் உறுதியானது

கொரோனாவுக்கு இந்தியாவில் முதல் உயிரிழப்பு..! சோதனையில் உறுதியானது
Published on

கர்நாடகாவில் உயிரிழந்த 76 வயது முதியவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதியாகியுள்ளது

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவத் தொடங்கியது. அதிகப்படியாக சீனாவில் அதிக உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. அதற்கு அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. இதனால் பல்வேறு நாட்டிற்கு செல்ல பல கெடுபிடிகள் நிலவி வருகின்றன. கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிக்கப்பட்டதாக சந்தேகத்தின்பேரில் சிகிச்சை பெற்று வந்த 76 வயது முதியவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார்.

கர்நாடக மாநிலம் கல்புர்கி மாவட்டத்தை சேர்ந்தவர் 76 வயது முதியவர் முகமது உசேன் சித்திக். இவர் சவுதி அரேபியாவிலிருந்து நாடு திரும்பிய நிலையில், கொரோனா அச்சம் காரணமாக சந்தேகத்தின் பேரில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அந்த முதியவர் நேற்று முன் தினம் உயிரிழந்தார். இருந்தாலும் அவர் கொரோனா பாதிப்பால்தான் உயிரிழந்தாரா என்பது முடிவாகாமல் இருந்தது. இதனால் இந்தியாவிலும் முதல் கொரோனா உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், உயிரிழந்த முதியவர் முகமது உசேனுக்கு கொரோனா இருந்தது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை ஆணையர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com