சந்தேக டார்ச்சர்: அழகைக் குறைக்க காதலியின் பற்களை ஓட்டையாக்கிய காதலன்!

சந்தேக டார்ச்சர்: அழகைக் குறைக்க காதலியின் பற்களை ஓட்டையாக்கிய காதலன்!

சந்தேக டார்ச்சர்: அழகைக் குறைக்க காதலியின் பற்களை ஓட்டையாக்கிய காதலன்!
Published on

தனது காதலி மற்றவர்களுக்கு அழகாகத் தெரியக் கூடாது என்பதற்காக, அவரது முன் பற்களை ஓட்டையாக்கிய சந்தேக காதலன் மீது புகார் தெரிவித்துள்ளார் காதலி!

ஆளைக் கொல்லும் நோய், சந்தேகம். திருமண உறவுகளில் விரிசல் ஏற்பட சந்தேகத்துக்கு இருக்கிறது பெரும் பங்கு. இதன் காரணமாக பல்வேறு குடும்பங்களில் பிரச்னை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், சந்தேகத்தால் இப்படியெல்லாமா பண்ணுவார்கள்? என்று ஆச்ச ரியப்படும் அளவுக்கு சம்பவம் ஒன்று நடந்திருக்கிறது குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்!

அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கீதா பென் (55). இவரது பார்ட்னர் ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆட்டோ டிரைவர். இவருக்கு வயது 57. இரண்டு பேருக்குமே திருமணம் முடிந்து குழந்தைகள் உள்ளனர். அதற்கு பிறகு இவர்களுக்குள் காதல் வளர்ந்தது. பின்னர் குடும்பத்தை அம்போ வென விட்டுவிட்டு, 15 வருடத்துக்கு முன் இருவரும் தனியாக வீடு எடுத்து காதல் வாழ்க்கையை வாழ்ந்து வந்தனர். ரமேஷ் ஆட்டோ ஓட்ட, கீதா வீட்டு வேலைகள் செய்து பணம் சம்பாதித்து வந்தார். 

காதலோடு போய்க் கொண்டிருந்த இவரது வாழ்க்கையில் கடந்த வருடம் ஏற்பட்டது சிக்கல். அதாவது ரமேஷுக்கு சந்தேகம் ஏற்பட்டது கீதா மீது. ‘நீ இனி வேலைக்கு போக வேண்டாம். நான் ஒருவன் சம்பாதிப்பது போதும்’ என்றார். சம்மதித்தார் கீதா. அடுத்து சில நாட்கள் கழித்து , ‘உன் முன் பற்களை எடுத்துவிடு’ என்றார் ரமேஷ். அதிர்ச்சி அடைந்த கீதா மறுத்தார். அப்போதுதான் உன்னை மற்றவர்கள் பார்க்கமாட்டார்கள் என்று கூறியுள்ளார். பிறகு கட்டாயப்படுத்தி அதை நீக்க வைத்து, ஓட்டைப் பல் ஆக்கினார். அடுத்து சில நாட்களில், ‘நான் இல்லாத நேரம் வீட்டுக்கு யாரோ வந்து போகிற மாதிரி இருக்கே?’ என்று கேட்டு, ஜன்னல்களை பிளாஸ்டிக் ஷீட் வைத்து அடைத்துள்ளார். இதையெல்லாம் கூட சகித்துக் கொண்டார் கீதா. 

சந்தேகத்தின் உச்சக்கட்டமாக, ‘நீ வீட்டுல சும்மாதான இருக்கே. என்கூட ஆட்டோவிலேயே வா’ என்று அவரையும் அழைத்துச் செல்லத் தொடங்கினார். அதாவது டிரைவர் சீட் அருகில் அவரையும் உட்கார வைத்துக்கொள்வார். வாடிக்கையாளர்களை பின் சீட்டில் அமர வைப்பார்.

இந்தக் கொடுமை தாங்காமல் ரமேஷூடன் சண்டை போட்டுள்ளார் கீதா. பின்னர் ஆட்டோவில் இருந்து குதித்துள்ளார். இதைக்கண்ட அங்கி ருந்தவர்கள் பெண்கள் உதவி மையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து விசாரித்தபோது இந்தக் கொடுமைகளை சொல்லி யிருக்கி றார் கீதா.

பிறகு, ’ரமேஷை நான் இன்னும் காதலிக்கிறேன். அவர் மீது வழக்கு ஏதும் பதிய வேண்டாம். எச்சரித்து, புரிய வைத்தால் போதும்’ என்று சொல்லியிருக்கிறார் கீதா. பிறகு அந்த அமைப்பினர் அவருக்கு அட்வைஸ் செய்து அனுப்பி வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com