யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் நிகழ்வில் துப்பாக்கி்யுடன் நுழைந்த நபர் – 7 போலீசார் சஸ்பெண்ட்

யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் நிகழ்வில் துப்பாக்கி்யுடன் நுழைந்த நபர் – 7 போலீசார் சஸ்பெண்ட்
யோகி ஆதித்யநாத் பங்கேற்கும் நிகழ்வில் துப்பாக்கி்யுடன் நுழைந்த நபர் – 7 போலீசார் சஸ்பெண்ட்

உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பஸ்தி மாவட்டத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்வில், அவரின் வருகைக்கு சில நிமிடங்களுக்கு முன்பு உரிமம் பெற்ற ரிவால்வருடன் ஒருவர் ஆடிட்டோரியத்திற்குள் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பாதுகாப்பு குறைபாடு காரணமாக 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இது குறித்து பேசிய பஸ்தி எஸ்பி ஆஷிஷ் ஸ்ரீவஸ்தவா, “பஸ்தி மாவட்டத்தில் முதல்வரின் நிகழ்ச்சி நடந்தது. அவர் வருவதற்கு நாற்பத்தைந்து நிமிடங்களுக்கு முன்பு, ஒரு நபர் தனது உரிமம் பெற்ற ரிவால்வருடன் ஆடிட்டோரியத்திற்கு வந்தார். அங்கு பணியில் இருந்த வட்ட அதிகாரி அவரைப் பார்த்த பின்னர் அந்த நபர் ஆடிட்டோரியத்திலிருந்து வெளியேற்றப்பட்டார், அவரது அடையாளமும் கண்டறியப்பட்டது” என்று அவர் கூறினார்.

ஆரம்பகட்ட விசாரணையில், பஸ்தி மாவட்டத்தை சேர்ந்த நான்கு போலீசார் உட்பட ஏழு காவல்துறையினர் பணி அலட்சியம் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com