\
செல்ஃபி ஆசையில் நேர்ந்த விபரீதம் - கால் தவறி ஆற்றுக்குள் மூழ்கிய இளைஞர்!

செல்ஃபி ஆசையில் நேர்ந்த விபரீதம் - கால் தவறி ஆற்றுக்குள் மூழ்கிய இளைஞர்!

செல்ஃபி ஆசையில் நேர்ந்த விபரீதம் - கால் தவறி ஆற்றுக்குள் மூழ்கிய இளைஞர்!
Published on

உத்ராகண்ட் மாநிலத்தில் சாங் ஆற்றில் 22 வயது இளைஞர் ஒருவர் செல்ஃபி எடுக்கமுயன்றபோது கால்தவறி நீரில் விழுந்து இறந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

சுபம் என்ற 22 வயது இளைஞர் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுபவர். இவர் க்ளெமெண்ட் டவுனில் வசித்துவருகிறார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அவரது நண்பர்களுடன் சேர்ந்து மால்தேவ்தாவைத் தாண்டிய ஒரு பகுதியில் சாங் ஆற்றில் விநாயகர் சிலையைக் கரைக்கச் சென்றுள்ளார். சிலை மூழ்கும்போது செல்ஃபி எடுக்க முயன்ற அவர், கால் நழுவி ஆற்றில் விழுந்துவிட்டார். அவரது நண்பர்கள் காப்பாற்ற முயற்சித்தப்போதிலும், வேகமான ஆற்றுவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டதாக நேரு காலனியைச் சேர்ந்த வட்ட அலுவலர் பல்லவி தியாகி தெரிவித்தார்.

இதுகுறித்து மாநில பேரிடர் மீட்பு குழுவினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். சுமார் இரண்டு மணிநேரம் தேடியபின் 8 கிலோமீட்டர் தொலைவில் ராய்ப்பூர் ஸ்டேடியம் அருகே ஒரு பாலத்தின் அடியில் அவரது உடலை கண்டெடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com