\
200 கிலோ மீட்டர் நடந்தே சென்ற தொழிலாளி மரணம் !

200 கிலோ மீட்டர் நடந்தே சென்ற தொழிலாளி மரணம் !

200 கிலோ மீட்டர் நடந்தே சென்ற தொழிலாளி மரணம் !
Published on

டெல்லியிலிருந்து 200 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள தனது சொந்த ஊருக்கு நடந்து சென்ற தொழிலாளர் வழியிலேயே உயிரிழந்தார்.

கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளி மாநிலங்களில் வேலை செய்து வரும் கூலி தொழிலாளர்கள் பேருந்து வசதி இல்லாமல் பல நூறு கிலோ மீட்டர்களை நடந்தே கடந்து வருகின்றனர்.டெல்லியிலுள்ள தனியார் உணவகத்தில் ஹோம் டெலிவரி செய்யும் பணியை செய்து வந்த ரன்வீர் சிங், மத்திய பிரதேசத்திலுள்ள மொரோனா மாவட்டத்திற்கு நடந்தே செல்ல திட்டமிட்டுள்ளார்.

டெல்லி- ஆக்ரா நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருக்கும்போது நெஞ்சுவலி ஏற்பட்டு சாலையில் சுருண்டு விழுந்தார். அருகிலிருந்த கடைக்காரர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 39 வயதுடைய ரன்வீர் சிங்கிற்கு மூன்று குழந்தைகள் உள்ளன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com