கர்நாடகாவில் முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவின் மகன் பயணித்த சொகுசு கார் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்தார்.
எடியூரப்பாவின் மகனும் பாஜக எம்.எல்.ஏவுமான ராகவேந்திரா, தனது தொகுதியான ஷிகாரிபுராவில் இருந்து பெங்களூருக்கு சொகுசு காரில் வந்துகொண்டிருந்தார். கார், தேவன்கேர் என்ற இடத்தில் நேற்றிரவு வந்துகொண்டிருந்த போது, சாலையின் ஓரத்தில் சென்றுகொண்டிருந்த ஒருவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். பலியான இளைஞர் மாதாபூராவை சேர்ந்த சுரேஷ் என்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து காரை ஓட்டி வந்த ரவிகுமாரை போலீசார் கைது செய்துள்ளனர்.