\
"மனைவியால் மன உளைச்சல்" செல்போன் டவரில் ஏறி மிரட்டிய கணவன்

"மனைவியால் மன உளைச்சல்" செல்போன் டவரில் ஏறி மிரட்டிய கணவன்

"மனைவியால் மன உளைச்சல்" செல்போன் டவரில் ஏறி மிரட்டிய கணவன்
Published on

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியுடன் சண்டையிட்டக்கொண்டு  நேற்று  செல்போன் டவரில்  ஏறி மிரட்டியுள்ளார்.

உத்தரபிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டத்தில் ஒரு நபர் தனது மனைவியுடன் தகராறு ஏற்பட்டதாகக்கூறி  நேற்று  செல்போன் டவரில்  ஏறி மிரட்டியுள்ளார். அதன்பின்னர் உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்குப் பிறகு அவர் தரையிறங்கியுள்ளார். இந்த செயல் குறித்து  அதிகாரிகள் அந்த நபரிடம் விசாரித்தபோது ” நான் என் மனைவியால் பெரும் மன உளச்சலில் இருக்கிறேன், அவர் என்னை  பொய்யான வழக்குகளில் சிக்கவைக்க முயற்சிக்கிறார், ஆனால் காவல்துறை  என்பக்க நியாயத்தை  கேட்கவில்லை. என் மனைவியுடன் இனி சேர்ந்துவாழ விருப்பம் இல்லை" என்று  கூறியுள்ளார்.

காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த நபரின் பெயர் தேஜ்பால் சிங் என்றும் அவர் மற்றும் அவரது மனைவி இருவரும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதுபோல கடந்த மே மாதம் பிரோசாபாத்தில் குடிபோதையில் ஒரு நபர் செல்போன் கோபுரத்தில் ஏறியுள்ளார், காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று விசாரித்தபோது உயரத்தில் ஏறினால் நல்ல காற்று கிடைக்கும் என்று ஏறியதாக கூறியுள்ளார்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com