ரூ.60,000 முதலீட்டில் உருவாக்கிய மினி ஜீப்  - வியந்த ஆனந்த் மஹிந்திரா

ரூ.60,000 முதலீட்டில் உருவாக்கிய மினி ஜீப் - வியந்த ஆனந்த் மஹிந்திரா

ரூ.60,000 முதலீட்டில் உருவாக்கிய மினி ஜீப் - வியந்த ஆனந்த் மஹிந்திரா
Published on

60 ஆயிரம் ரூபாய் முதலீட்டில் மினி ஜீப்பை உருவாக்கிய, நபரை பாராட்டிய, மஹிந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, மினி ஜீப்பை தான் வாங்கிக் கொள்வதாகவும், அதற்கு பதிலாக பொலிரோ காரை வழங்குவதாகவும் அறிவித்துள்ளார்.

மகராஷ்டிராவைச் சேர்ந்த தத்தாத்ரேயர் லோகர் என்பவர், பழைய கார் மற்றும் இருசக்கர வாகனங்களின் உதிரிப் பாகங்களைக் கொண்டு, தனது மகனுக்காக மினி ஜீப்பை உருவாக்கியுள்ளார். இவரது ஜீப் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது. மினி ஜீப்பை பார்த்து வியந்த ஆனந்த் மஹிந்த்ரா, ட்விட்டரில் அவருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த மினி ஜீப், விதிமுறைகளை மீறி இயக்கப்படுவதாகக் கூறி, அதனை இயக்கத் தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால், மினி ஜீப்பை தான் வாங்கிக் கொள்வதாக ஆனந்த் மஹிந்தரா தெரிவித்துள்ளார். அதற்கு பதிலாக, மஹிந்திரா நிறுவனத்தின் பொலிரோ வாகனத்தை தருவதாக அவர் கூறியுள்ளார். மஹிந்திரா ஆராய்ச்சி நிறுவனத்தில், மினி ஜீப் பார்வைக்காக வைக்கப்படும் எனவும் ஆனந்த் மஹிந்திரா குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com