\
தகாத தொடர்பை கைவிட ரூ.5 லட்சம், இல்லையென்றால்..: மிரட்டும் உறவினர் மீது பெண் புகார்!

தகாத தொடர்பை கைவிட ரூ.5 லட்சம், இல்லையென்றால்..: மிரட்டும் உறவினர் மீது பெண் புகார்!

தகாத தொடர்பை கைவிட ரூ.5 லட்சம், இல்லையென்றால்..: மிரட்டும் உறவினர் மீது பெண் புகார்!
Published on

தகாத தொடர்பை கைவிட வேண்டுமென்றால் ரூ.5 லட்சம் வேண்டும் என்று மிரட்டல் விடுத்த உறவினர் மீது பெண் கொடுத்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை அருகிலுள்ள சங்கிலி பகுதியைச் சேர்ந்தவர் லதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த சில வருடங்களாக மது போதைக்கு அடிமையான கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு 18 வயதில் ஒரு மகன் இருக்கிறார். 

திருமணம் ஒன்றுக்குச் சென்ற லதா அங்கு தனது உறவினர் வாஷி பகுதியைச் சேர்ந்த கண்ணனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்தார். இருவரும் ஃபோன் நம்பரை மாற்றிக்கொண்டனர். அடிக்கடி போனில் பேசி நட்பை வளர்த்தனர். பின்னர் கண்ணன், லதாவை தேடி அடிக்கடி சங்கிலிக்கு வருவார். யாருமில்லாத நேரத்தில் இருவரும் தனிமையில் இருந்துள்ளனர். 

இந்நிலையில் கண்ணன், தன்னைத் திருமணம் செய்துகொள்ளும்படி லதாவை வற்புறுத்தியுள்ளார். கண்ணனுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இதனால் மறுத்தார் லதா. தொடர்ந்து வற்புறுத்தி வந்ததால், கண்ணனின் தொடர்பை கைவிட முடிவு செய்தார். அவர் ஃபோன் அழைப்புகளை தவிர்த்து வந்தார்.

இந்நிலையில் வேறு எண்ணில் இருந்து லதாவை அழைத்த கண்ணன், ’தனது தொடர்பை கைவிட வேண்டும் என்றால், ரூ.5 லட்சம் தர வேண்டும், இல்லை என்றால் உனது ஆபாச புகைப்படங்களை மற்ற உறவினர்களுக்கு அனுப்பி விடுவேன்’ என்று மிரட்டியுள்ளார்.

இதையடுத்து லதா, போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், கண்ணனைத் தேடி வருகின்றனர்.  
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com