தந்தை போன்ஸ்லே மற்றும் சாதனா  உயிரிழந்த மாணவி
தந்தை போன்ஸ்லே மற்றும் சாதனா உயிரிழந்த மாணவிமுகநூல்

’நீட் மாதிரி தேர்வில் ஏன் கம்மி மார்க் எடுத்தாய்?’ - குச்சியால் அடித்த தந்தை.. பறிபோன மகளின் உயிர்!

மகாராஷ்டிராவில் நீட் மாதிரி தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்காக தனது 17 வயது மகளை தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Published on

மகாராஷ்டிராவின் சாங்லியைச் சேர்ந்தவர் சாதனா போன்ஸ்லே. இவர், நீட் மாதிரி தகுதி தேர்வுக்காக, தன்னை தயாரித்து வந்துள்ளார். 10ம் வகுப்பில் 92.60 சதவிகித மதிப்பெண்களை பெற்றுள்ளார். இந்தநிலையில்தான், மாணவி ஒரு வருட இடைவெளியில் நடைப்பெற்ற மாதிரி நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்துள்ளார். பயிற்சித் தேர்வுகளில் அப்பெண் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றதால் ஆத்திரமடைந்த பெண்ணின் தந்தை தோண்டிராம் போன்ஸ்லே, தனது 17 வயது மகளை ஒரு குச்சியால் பலமுறை அடித்துள்ளார்.

இதனால், சாதனா போன்ஸ்லேவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், சாதனாவை சாங்லியில் உள்ள உஷாகல் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இந்த சம்பவம் நடந்திருக்கிறது. தனது மகளை அடித்ததாக தோண்டிராம் ஒப்புக்கொண்டநிலையில், அவரை போலீஸார் கைது செய்தனர்.

தந்தை போன்ஸ்லே மற்றும் சாதனா  உயிரிழந்த மாணவி
அடேங்கப்பா! சமஸ்கிருதத்திற்கு இத்தனை கோடிகள் ஒதுக்கீடா? பாரம்பரிய மொழிகள் புறக்கணிப்பா? RTI தகவல்!

இதுகுறித்து விளக்கமளித்துள்ள காவல்துறையினர், "சிறுமியின் தாய் ஜூன் 22 அன்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தனது கணவர் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தனது மகளை பலமுறை குச்சியால் அடித்தார். இதனால், எனது மகள் இறந்துவிட்டாள் என்று புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளளார். வழக்கு விசாரணையில் உள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

தந்தை போன்ஸ்லே மற்றும் சாதனா  உயிரிழந்த மாணவி
தந்தை போன்ஸ்லே மற்றும் சாதனா உயிரிழந்த மாணவி

குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் ஆத்திரமடைந்த தனது 17 வயது மகளை தாக்கிய நபர், ஒரு பள்ளி ஆசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனெவே, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை , நல்ல மதிப்பெண்களை பெற முடியவில்லை என பலக்காரணங்களால் நீட் தேர்வு குறித்த அச்சத்தால், மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவங்களை யாராலும் மறக்கவே முடியாது. ஆனால், தற்போது ஆசிரியராக உள்ள ஒருவரே, ஒரு மாதிரி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் பெற்ற மகளை அடித்துக் கொன்ற சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com