\
அடக்கொடுமையே! நாயை கடத்தி வறுவல் வைத்த இளைஞர்கள்

அடக்கொடுமையே! நாயை கடத்தி வறுவல் வைத்த இளைஞர்கள்

அடக்கொடுமையே! நாயை கடத்தி வறுவல் வைத்த இளைஞர்கள்
Published on

ஹரியானா மாநிலம் குருகிராமில் இளைஞர்கள் சிலர் வளர்ப்பு நாய் ஒன்றை அடித்துக் கொன்று சமைத்து சாப்பிட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

பிரவுனி என பெயரிடப்பட்ட அந்த வளர்ப்பு நாயை வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் கடத்திச் சென்று அடித்துக் கொன்றதாக விலங்குகள் நல தன்னார்வ அமைப்பு ஒன்று புகார் தெரிவித்துள்ளது. நாயைக் கொன்று வறுவல், பொரியல், குழம்பு என சமைத்து சாப்பிட்டதற்கான வீடியோ ஆதாரங்கள் இருப்பதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஆனால் வீடியோவில் ஓர் இளைஞர் கூறுவதை வைத்து நாயை கொன்றதாக எடுத்துக் கொள்ளமுடியாது என தெரிவித்துள்ள காவல்துறையினர், இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com