\
லக்னோவில் பசுவை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

லக்னோவில் பசுவை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

லக்னோவில் பசுவை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது
Published on: 

உத்தரப் பிரதேசம் லக்னோவில் பசுவை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் லக்னோவின் சரோஜ்னி நகரில் உள்ள தரோகா கேராவில் வசித்து வந்தவர் மஜித். இவர் கடந்த ஏப்ரல் 23 அன்று பசு ஒன்றை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி உள்ளார். இவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த பக்கத்து வீட்டுக்காரர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளார். அதில் மஜித் பசுவை பாலியல் வன்கொடுமை செய்வது உறுதியாகி உள்ளது.

மஜித் இரண்டாவது முறையாக பசுவை பலாத்காரம் செய்ய முயற்சிப்பதை பக்கத்து வீட்டுக்காரர் பார்த்துள்ளார். அவர் பசுவின் உரிமையாளருக்குத் தகவல் கொடுத்ததைத் தொடர்ந்து, இந்த விவகாரம் காட்டுத் தீயாக பரவியது. குற்றவாளியைப் பிடிக்க உள்ளூர்வாசிகளால் தேடுதல் குழு அமைக்கப்பட்டது. பின்னர் அந்த நபரை லக்னோவின் சரோஜ்னி நகரில் உள்ள தரோகா கேராவில் இருந்து போலீசார் கைது செய்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com