"மது அருந்தினால் கொரோனா குணமாகும்" போலீஸ் உடையில் பொய் பிரச்சாரம்!
பஞ்சாப் மாநிலத்தில் போலீஸ் போல வேடமிட்டு, மது அருந்தினால் கொரோனா குணமாகும் என பொய் பிரச்சாரம் செய்தவரை போலீஸார் கைது செய்தனர்.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்தவர் குல்வந்த் சிங். இவர் பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. அந்த வீடியோவில் மது அருந்தினால் கொரோனா குணமாகவும் என பேசியிருந்தார். மேலும், அந்த நபர் போலீஸ் உடையில் இருந்ததால், இந்தப் பிரச்சாரம் மிக வேகமாக பரவியது. ஆனால் வீடியோவில் பேசிய நபர் போலீஸ் இல்லை. எனவே இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடிவெடுத்தது பஞ்சாப் மாநில காவல்துறை.
இதனையடுத்து அவரை தேடி கைது செய்தது பஞ்சாப் மாநிலக் காவல்துறை.மேலும் இது குறித்து தங்களுடைய ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்தது பஞ்சாப் போலீஸ். அதில் "கடந்த சில நாள்களாக வீடியோ ஒன்று உலா வருகிறது. அதில் போலீஸ் உடையணிந்த ஒருவர் மது அருந்தினால் கொரோனா குணமாகும் என பேசியுள்ளார். அவரின் பெயர் குல்வாந்த் சிங் திலான். அவரை நாங்கள் கைது செய்திருக்கிறோம்" என தெரிவித்துள்ளனர்.