\
புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி

புதுச்சேரியில் மேலும் ஒருவருக்கு கொரோனா உறுதி
Published on

புதுச்சேரியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

புதுச்சேரி அடுத்த செல்லிபட்டு கிராமத்தை சேர்ந்த 37 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவருக்கு கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் புதுச்சேரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே 8 பேர் குணமடைந்த நிலையில் தற்போது 3 மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தவிர ஜிப்மர் மருத்துவமனையில் கடலூர், விழுப்புரம் பகுதியை சேர்ந்த 5 பேர் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள் .

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com