\
இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதி தப்பி ஓட்டம்

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதி தப்பி ஓட்டம்

இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு - கைதி தப்பி ஓட்டம்
Published on

கோவாவில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த 24 வயது வாலிபன் போலீஸில் இருந்து தப்பியோடியுள்ளார்.

தெற்கு கோவா பகுதியில் உள்ள கோல்வா கடற்கரையின் விரிவாக்கம், செர்னாபடிம் என்ற கடற்கரை பகுதி. இந்தப் பகுதி எப்போதும் சுத்தமாக இருக்கும் என்பதால் இங்கு அதிகமான சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். இந்நிலையில் பக்கத்து ஊரைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், தனது காதலருடன் இரவு நேரத்தில் கடந்த மே மாதம் 24 ஆம் தேதி வந்தார். அப்போது கடற்கரையில் யாருமில்லை. இதையடுத்து இருவரும் நெருக்கமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென்று அங்கு வந்த மூன்று இளைஞர்கள், இருவரையும் மிரட்டி உடைகளை கழற்றும் படி கூறினர். பின்னர் அவர்களை நிர்வாணப்படுத்தி புகைப்படம் எடுத்து மிரட்டி அவர்களிடம் இருந்து பணத்தைக் பறித்தனர். பின்னர் காதலன் கண் முன்பே அந்த இளம் பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.

மூவரும் மாறிமாறி பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அதை வீடியோவும் எடுத்துள்ளனர். பிறகு இந்தச் சம்பவம் பற்றி போலீசில் சொன்னால் வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டிவிட்டு தப்பியோடினர்.
 
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது காதலரும் தெற்கு கோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த வழக்கில் ஈடுபட்ட சஞ்சிவ் தனஞ்செய் (23), ராம் சந்தோஷ் (19), மேக்வனா ஆகிய 3 பேரையும் கைது செய்து மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் இந்தூரில் இருந்து சுற்றுலாவுக்காக வந்தவர்கள் என்பது தெரிய வந்தது.

இந்நிலையில் மேக்வனா காசநோயால் தாக்கப்பட்டிருந்ததால் அவனை போலீசார் சிகிச்சைக்காக மருத்துவனைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது, போலீசார் மருந்து வாங்க சென்றபோது அங்கிருந்து கைதி மேக்வனா தப்பி சென்றார்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில் மேக்னாவை தீவிரமாக தேடிவருவதாகவும் அவனை பற்றி துப்பு கொடுப்பவர்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com