கொலையாளியை உயிருடன் எரித்துக் கொன்ற கிராமத்தார் - பஞ்சாயத்தில் அதிரடி தீர்ப்பு

கொலையாளியை உயிருடன் எரித்துக் கொன்ற கிராமத்தார் - பஞ்சாயத்தில் அதிரடி தீர்ப்பு

கொலையாளியை உயிருடன் எரித்துக் கொன்ற கிராமத்தார் - பஞ்சாயத்தில் அதிரடி தீர்ப்பு
Published on

பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த இளைஞரை பஞ்சாயத்தார் உத்தரவின்படி மரத்தில் கட்டி வைத்து உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அசாமில் அரங்கேறியுள்ளது.

அசாம் மாநிலம் நஹோன் மாவட்டம் போர் லாலுங் கிராமத்தைச் சேர்ந்தவர் சபிதா (35). இரண்டு குழந்தைகளின் தாயாரான இவரை, கடந்த வாரம் மர்ம நபர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கழுத்தை அறுத்து கொலை செய்தார். இச்சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த 5 இளைஞர்கள் மீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவர்கள் யார் யார் என தெரிந்துக் கொண்ட கிராமத்தார், நேற்று இரவோடு இரவாக அவர்கள் அனைவரையும் அழைத்து வந்து பஞ்சாயத்தை கூட்டினர். நடு இரவில் நடைபெற்ற பஞ்சாயத்தில் ரஞ்சித் போர்டோலோய் (30) என்ற இளைஞர், தான் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார்.

இதையடுத்து, அந்த இளைஞரை உயிருடன் எரிக்குமாறு பஞ்சாயத்தார் தீர்ப்பு வழங்கினர். இதனைத் தொடர்ந்து, அந்த இளைஞரை அங்கேயே நிர்வாணமாக்கிய கிராம மக்கள், அங்கிருந்த ஒரு மரத்தில் கட்டினர். பின்னர், அவர் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். உடல் முழுவதும் தீப்பற்றியதால் அலறி துடித்த ரஞ்சித், சிறிது நேரத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார், ரஞ்சித்தை கொலை செய்தவர்களை தேடி வருகின்றனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com