\
காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டர் மூலம் லாவகமாக மீட்ட விமானப்படையினர்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டர் மூலம் லாவகமாக மீட்ட விமானப்படையினர்

காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியவரை ஹெலிகாப்டர் மூலம் லாவகமாக மீட்ட விமானப்படையினர்
Published on: 

சத்தீஸ்கரில் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவரை இந்திய விமானப்படையினர் காப்பாற்றும் வீடியோக் காட்சிகள் வெளியாகியுள்ளன.

பிலாஸ்பூர் பகுதியில் உள்ள குத்தாகட் அணையில் அதிகளவில் நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது பெருவெள்ளத்தில் சிக்கிக் கொண்ட ஒருவர் உயிருக்குப் போராடி தத்தளித்துக் கொண்டிருந்தார்.

தீயணைப்புத் துறையினரால் கூட மீட்க முடியாத இடத்திலும், நீரோட்டம் அதிகமுள்ள இடத்திலும் அந்த நபர் சிக்கிக் கொண்டிருந்ததால் விமானப்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு ஹெலிகாப்டருடன் விரைந்த விமானப்படையினர் அச்சத்தில் உறைந்து தத்தளித்துக் கொண்டிருந்த அந்த நபரை லாவகமாக மீட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com