காசு, பணம் இருந்தும் காதலி கிடைக்கலையே...விரக்தியில் இளைஞர் தற்கொலை!
முன்னாள் காதலிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் விரக்தி அடைந்த பணக்கார இளைஞர் கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார்.
மும்பை, கர் பகுதியை சேர்ந்தவர் பவன்ஜீத் சிங் கோலி. வயது 24. இவரது தந்தை ஜஸ்பால் தொழிலதிபர். கோலிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஆடி கார் ஒன்றை வாங்கிக் கொடுத்தார் ஜஸ்பால். காரில் ஜாலியாக வலம் வந்த கோலிக்கு காதல் ஜாலியாக அமையவில்லை. தனது நண்பர்களுடன் மது குடிக்கும் பழக்கம் கொண்ட கோலி, நேற்றுமுன் தினம் மாலையில் அதிகமாகக் குடித்தாராம். பின்னர் நண்பர்கள் அவரை வீட்டு வாசலில் இறக்கிவிட்டு சென்றனர். ஆனால் வீட்டுக்குச் செல்லாத கோலி, ஒரு காரை வாடகைக்குப் பிடித்தார். பின்னர் பாந்த்ரா-ஒர்லி கடல் பாலத்தில் போகச் சொன்னார். நடுப்பகுதியில் காரை நிறுத்த சொன்ன கோலி, தனக்கு வாமிட் வருவதாகக் கூறி காரை போகச் சொல்லிவிட்டார். பிறகு அங்கிருந்து கடலில் விழுந்து தற்கொலை செய்துகொண்டார். அவரது உடல் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
கோலியின் நண்பர்கள் கூறும்போது, ’அவரது காதலிக்கு வேறொருவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததால் மன வருத்தத்தில் இருந்தார் கோலி. காசு பணம் இருந்தும் காதலி கிடைக்கலையே என்றே சொல்லி வந்தார். இதனால் அவர் தற்கொலை செய்திருக்கலாம்’ எனக் கூறினர். போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

