பெகாசஸ் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜி

பெகாசஸ் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜி
பெகாசஸ் விவகாரம் - ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தார் மம்தா பானர்ஜி

பெகாசஸ் உளவு விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் மேற்குவங்க அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளது.

நீதிபதிகள், பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்களின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்ட விவகாரம் நாடாளுமன்றத்தில் பெரும் புயலை கிளப்பி வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், பெகாசஸ் விவகாரத்தில், மேற்குவங்க மாநிலத்தில் தொலைபேசிகள் ஒட்டுக்கேட்கப்பட்டதா? சட்டவிரோதமான முறையில் ஹேக்கிங் செய்யப்பட்டதா? என்பது குறித்து அறிய அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி, மதன் பி லோகூர் மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி ஜோதிர்மய பட்டாச்சார்யா ஆகியோர் தலைமையில் விசாரணை ஆணையத்தை அமைத்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் வெளியிடும் என எதிர்பார்த்தாகவும், ஆனால், அப்படி ஒரு அறிவிப்பு வெளியாகாததால் நாட்டிலேயே முதல் மாநிலமாக விசாரணை ஆணையத்தை மேற்குவங்கம் அமைத்திருக்கிறது எனவும் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com