mamata benerjeeweb
இந்தியா
திரிணமூல் காங். கட்சி.. தலைமையகத்தையும் இழந்த மம்தா!
தேர்தல் ஆணையத்தில் உரிமை கோரிய 24 மணி நேரத்திலேயே கொல்கத்தா தற்காலிக தலைமையகத்தை அதிருப்திக் குழு கைப்பற்றியது.
மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸில் மம்தா பானர்ஜிக்கு எதிரான உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் ஆணையத்தைச் சந்தித்து தாங்கள் தான் உண்மையான டிஎம்சி என உரிமை கோரிய 24 மணி நேரத்திற்குள், அதிருப்தி குழுவின் தலைவரான ரிதாப்ரதா பானர்ஜி தனது ஆதரவாளர்களுடன் சென்று கொல்கத்தாவில் உள்ள கட்சியின் தற்காலிகத் தலைமையகத்தைக் அதிரடியாகக் கைப்பற்றினார்.
Rebel Faction Seizes TMC Headquartersweb
அலுவலகத்திற்குப் புதிய பூட்டைப் போட்ட அதிருப்தி குழுவினர், அரூப் ராயைக் கட்சியின் புதிய தலைவராக அறிவித்து போஸ்டர் ஒட்டியுள்ளனர். அதேநேரம், மம்தா பானர்ஜியின் புகைப்படங்கள் அகற்றப்படவில்லை. இதனை சட்டவிரோத ஆக்கிரமிப்பு என விமர்சித்துள்ள மம்தா தரப்பினர், காவல்துறையிலும் புகார் அளித்துள்ளனர்.

