\
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் கொரோனாவுக்கு உயிரிழப்பு
Published on

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்தார்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் இளைய சகோதரர் ஆஷிம் பானர்ஜி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில்  சிகிச்சைப்பெற்று வந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்தார்.

மேற்கு வங்கத்தில் தற்போது 1,31,792 பேர் கொரோனாவுக்கு சிகிச்சைப்பெற்று வருகின்றனர். 12,993 பேர் இதுவரை கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். 9,50,017 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதன் காரணமாக மே 31 வரை முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com