பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் அத்வானி, குடியரசுத் தலைவர் ஆவதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆதரவு தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற போது, அடுத்த குடியரசுத் தலைவராக அத்வானி தேர்வு செய்யப்பட்டால் தனக்கு மகிழ்ச்சியே என்று கூறியுள்ளார். மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் மற்றும் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் போன்றோர் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் தனக்கு சம்மதமே என்றும் குறிப்பிட்டுள்ளார்.

