\
"குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வது பாஜகவுக்கு எளிதல்ல" - மம்தா பானர்ஜி

"குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வது பாஜகவுக்கு எளிதல்ல" - மம்தா பானர்ஜி

"குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வது பாஜகவுக்கு எளிதல்ல" - மம்தா பானர்ஜி
Published on

குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல என மேற்கு வங்காள முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில் பேசிய அவர், 4 மாநிலல்களில் பாஜக வெற்றிபெற்ற போதும் குடியரசுத் தலைவர் தேர்தலில் வெல்வது எளிதாக இருக்காது எனத் தெரிவித்தார். நாடெங்கும் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் கீழானவர்களின் ஆதரவே பாஜகவுக்கு உள்ளதாகவும் மம்தா தெரிவித்தார்.

சமாஜ்வாதி கட்சி முன்பை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றிருப்பதையும் மம்தா சுட்டிக்காட்டினார். எனவே அரசியலில் பாஜகவின் கை ஓங்கிவிட்டதாக கருத முடியாது என்றும் தேர்தல் களத்தில் இன்னும் ஆட்டம் மீதி உள்ளது என்றும் மம்தா தெரிவித்தார். குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை மாதம் நடக்க உள்ளது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அனைத்து மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களும் வாக்களிக்க உள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com