ஹெலிகாப்டர் அனுமதி மறுத்ததால் காரில் பயணம் : யோகி ஆதித்யநாத் அதிரடி முடிவு
உ.பி. முதல்வர் யோகிக்கு ஹெலிகாப்டரில் செல்வதற்கு மேற்குவங்க அரசு அனுமதி வழங்காததால் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க யோகி ஆதித்யநாத் காரில் செல்கிறார்.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் இன்று நடைப்பெறும் பாஜகவின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பங்கேற்கவுள்ளார். இதற்காக பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு உ.பி. முதல்வர் யோகி ஹெலிகாப்டரில் செல்லவதற்கு மேற்குவங்கம் வர அம்மாநில அரசு தடைவிதித்திருந்தது.
இந்த நிலையில் திட்டமிட்டபடி இன்று பாஜகவின் தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் மேற்குவங்கம் செல்கிறார். ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பொகாரோவுக்கு ஹெலிகாப்டரில் செல்லும் யோகி ஆதித்யநாத், பின்னர் அங்கிருந்து மேற்குவங்க மாநிலத்தில் உள்ள புருலியாவுக்கு காரில் சென்று பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.