“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி

“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி

“கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன்” - மம்தா பானர்ஜி
Published on

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்பவில்லை என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மத்திய ஆட்சியை தீர்மானிக்கு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் 7 கட்டமாக நிறைவு பெற்றுள்ளது. இதையடுத்து 23ஆம் தேதி வெளியாகவுள்ள தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து நாடே காத்திருக்கிறது. இந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளை தேசிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இதில் பாஜகவே பெரும்பான்மை இடங்களை பிடிக்கும் எனப் பெரும்பாலான ஊடகங்கள் தெரிவித்துள்ளன. 

அதன்படி, பாஜக கூட்டணி - 287, காங்கிரஸ் கூட்டணி - 128, மற்றவை - 127 இடங்களைப் பிடிக்கும் என ரிபப்ளிக் டிவி கணித்துள்ளது. பாஜக கூட்டணி - 306, காங்கிரஸ் கூட்டணி - 132, மற்றவை - 104 இடங்களைப் பிடிக்கும் என டைம்ஸ் நவ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூஸ் எக்ஸ் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பில் பாஜக கூட்டணி - 242, காங்கிரஸ் கூட்டணி - 164, மற்றவை - 136 இடங்களில் வெல்லும் எனக் கூறப்பட்டுள்ளது. என்.டி.டிவி கணிப்பில் பாஜக கூட்டணி - 306, காங்கிரஸ் கூட்டணி 124, மற்றவை - 112 இடங்களைப் பிடித்துள்ளன. இதேபோன்று தமிழகத்தில் திமுக 30க்கும் மேற்பட்ட இடங்களைப் பிடிக்கும் எனவும், அதிமுக கூட்டணி 5 இடங்கள் பிடிக்க வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வதந்திகளை நான் நம்ப மாட்டேன். ஆயிரக்கணக்கான வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்கு எண்ணிக்கை மாற்றவோ அல்லது இயந்திரங்களை மாற்றவோ தான் இந்தத் திட்டம். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன், வலிமையுடன், உறுதியாகவும் இருக்க வேண்டும். நாம் ஒற்றுமையாக இருந்து போரிட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com