ஃபோனி புயல்: பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு களத்தில் குதித்த மம்தா பானர்ஜி!

ஃபோனி புயல்: பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு களத்தில் குதித்த மம்தா பானர்ஜி!
ஃபோனி புயல்: பிரசாரத்தை ரத்து செய்துவிட்டு களத்தில் குதித்த மம்தா பானர்ஜி!

ஃபோனி தாக்குதலை அடுத்து, தேர்தல் பிரசாரத்தை நிறுத்திவிட்டு கடலோரப் பகுதிகளில் புயல் பாதிப்பை கண்காணிக்கும் பணியில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேரடியாக ஈடுபட்டுள்ளார்.

ஃபோனி புயல், ஒடிசாவின் புரி பகுதியில் இன்று காலை கரையைக் கடந்தது. அங்குள்ள கோபால்பூர்- சந்த்பாலி இடையே கனத்த மழையுடன் புயல் கரையை கடந்தபோது, மணிக்கு 240-ல் இருந்து 245 கி.மீ வேகத்தில் புயல் காற்று வீசியது. இந்த ஃபோனி புயல், கஜா, வர்தாவை விட கடுமையாக இருக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

புரி பகுதியில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்துள்ளன. குடிசைகளும் இடிந்து விழுந்தன. வீட்டின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தன. மின் விநியோகம், செல்போன் சேவை முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவிலும் புயல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்திலும் புயலின் தாக்கம் இருக்கும் என்பதால் அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

பல பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழு, மற்றும் கடற்படை வீரர்கள் மீட்பு பணிகளுக்காகவும் நிவாரண உதவிகளுக்காகவும் தயார் நிலையில் உள்ளனர். 

இந்நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஃபோனி புயல் பாதிப்பைக் கணிக்காணிக்க இருப்பதாகவும் இதற்காக இரண்டு நாள்கள் தேர்தல் பேரணி மற்றும் பிரசாரத்தை ரத்து செய்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

இதுபற்றி ட்விட்டரில் அவர், ‘’புயல் பாதிப்பை, தொடர்ந்து கண்காணிக்கிறோம். தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. கடலோர பகுதி மக்கள் 2 நாட்கள் எச்சரிக்கையாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்’’ என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com