“உலகக் கோப்பை இறுதிப் போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடந்திருந்தால்...” - மம்தா பானர்ஜி

உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி கொல்கத்தா அல்லது மும்பையில் நடைபெற்றிருந்தால் இந்தியா வென்றிருக்கும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜிPT

கொல்கத்தாவில் திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “உலகக்கோப்பை தொடரில் முதல் 10 ஆட்டங்களில் வெற்றிபெற்ற இந்தியா, இறுதிப் போட்டியில் தோற்றதற்கு பாவம் செய்த ஒருவர் அப்போட்டியை காண வந்ததுதான் காரணம்” என்றார். மேலும் இந்திய கிரிக்கெட் அணியை காவிமயமாக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி செய்து வருவதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “இந்திய கிரிக்கெட் வீரர்கள் காவி நிற உடை அணிந்து போட்டிகளில் ஆட நிர்பந்தங்கள் வந்துள்ளது. ஆனால் அதற்கு வீரர்கள் மறுத்து விட்டனர். காவி என்பது துறவிகள் மற்றும் தியாகிகளின் நிறம். அது பேராசைக்காரர்களின் நிறம் அல்ல” என்றும் தெரிவித்தார்.

மம்தா பானர்ஜியின் இந்த பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “தேசியக் கொடியில் காவி நிறம் ஏன் உள்ளது என்று கூட மம்தா கேள்வி எழுப்பக்கூடும்” என மேற்கு வங்க பாஜக செய்தித் தொடர்பாளர் சமிக் பட்டாச்சார்யா தெரிவிதுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com