\
ஜனாதிபதி மாளிகையில் மம்தா பானர்ஜி வரைந்த ஓவியம்

ஜனாதிபதி மாளிகையில் மம்தா பானர்ஜி வரைந்த ஓவியம்

ஜனாதிபதி மாளிகையில் மம்தா பானர்ஜி வரைந்த ஓவியம்
Published on: 

மம்தா பானர்ஜி வரைந்த ஓவியம் ஒன்று ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற உள்ளது.

ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதிவியேற்ற பிறகு முதன்முறையாக அவர் கொல்கத்தாவுக்கு வருகை தந்திருந்தார். அவரை விமான நிலையத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வரவேற்றார். ஜனாதிபதியின் வருகை பெருமை தருவதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

கொல்கத்தா நகரத்தில் உள்ள நேதாஜி உள்விளையாட்டு அரங்கத்தில் நிகழ்ச்சிகளை கலந்து கொண்ட ராம்நாத் கோவிந்த்திற்கு மம்தா தன் கையால் வரைந்த ஓவியத்தை பரிசளித்தார். அதனை பெற்றுக் கொண்ட ஜனாதிபதி, “இந்த ஓவியம் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெறும்” என்று கூறினார். மத்தியில் ஆட்சி செய்யும் மோடி அரசின் நடவடிக்கைகளை மிக கடுமையாக விமர்சித்து வரும் மம்தா, ஜனாதிபதியை சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக கருதப்படுகிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com