“இது மக்களின் வெற்றி; ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி” - மம்தா பானர்ஜி
இது மக்களின் வெற்றி. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்த சுவேந்து அதிகாரி அண்மையில் பாஜகவில் இணைந்தார். இதையடுத்து தைரியம் இருந்தால் நந்திகிராம் தொகுதியில் தன்னை எதிர்த்து மம்தா பானர்ஜி போட்டியிடட்டும் என சுவேந்து அதிகாரி சவால் விடுத்தார். இதனால் வழக்கமாக போட்டியிடும் தொகுதியை விடுத்து நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியை எதிர்த்து போட்டியிட்டார் மம்தா.
இந்நிலையில்தான் மம்தா பானர்ஜி சுவேந்து அதிகாரியை தோற்கடித்துள்ளார். மேற்கு வங்கத்தை பொறுத்தவரை, தற்போதைய நிலவரப்படி 216 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் பாஜக 75 தொகுதிகளிலும் முன்னிலை வகித்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மம்தா பானர்ஜி “இது மக்களின் வெற்றி. ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி” எனத் தெரிவித்தார்.

