\
மேற்கு வங்கம்: 3 ஆவது முறையாக முதல்வராகிறார் மம்தா

மேற்கு வங்கம்: 3 ஆவது முறையாக முதல்வராகிறார் மம்தா

மேற்கு வங்கம்: 3 ஆவது முறையாக முதல்வராகிறார் மம்தா
Published on

மேற்குவங்க மாநில முதலமைச்சராக மூன்றாவது முறையாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று காலை பதவியேற்றுக் கொள்கிறார்.

கொரோனா நோய் பரவல் காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா எளிமையாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவுக்கான அழைப்பிதழ் அனுப்பப்படவில்லை. மேற்குவங்க மூத்தத் தலைவரான புத்ததேவ் பட்டசார்ஜி, முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் மன்னன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பீமன் போஸ், திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி, தேர்தல் வியூகவியலாளர் பிரசாந்த் கிஷோர், கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத் தலைவர் சவுரவ் கங்குலி ஆகியோருக்கு மட்டுமே பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காலை 10.45 மணிக்கு நடைபெறும் பதவியேற்பு விழாவில், மம்தா பானர்ஜி மட்டுமே பதவியேற்றுக் கொள்கிறார். அதன் பின் தலைமைச் செயலகத்துக்கு செல்லும் அவர், கொல்கத்தா காவல்துறை அளிக்கும் மரியாதை அணிவகுப்பை ஏற்றுக் கொள்கிறார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com