கேரளா: வீட்டு வேலைக்கு குவைத் சென்ற பெண் மர்ம மரணம்; நீதி கேட்டு கணவன் கோரிக்கை

வீட்டு வேலைக்கு குவைத் சென்ற பெண் மர்ம மரணம்.
உயிரிழந்த அஜிதா
உயிரிழந்த அஜிதாManorama

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர் வீட்டு வேலைக்காக குவைத் சென்று ஆறு மாதங்களில் சடலமாக திரும்பிய அதிர்ச்சி சம்பவம்

கேரளா மீனங்காடியை சேர்ந்தவர் 50 வயதான அஜிதா. இவர் தனது கணவர் விஜயன் மற்றும் மகள் மிதுஷாவுடன் கேரளாவில் வசித்து வந்த நிலையில், குடும்ப வறுமை காரணமாக அஜிதா வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஏஜென்ஸியின் மூலம் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு குவைத் நாட்டில் சுலைபியா என்ற பெண்ணின் வீட்டிற்கு வீட்டு வேலைக்காக அஜிதா அனுப்பப்பட்டார்.

இறந்தவர்
இறந்தவர்

அங்கு சுலைபியாவுக்கும் ஏஜென்சிக்கும் சில பிரச்னை இருந்து வந்ததாக கூறப்பட்ட நிலையில், அஜிதா சுலைபியாவின் மகள் வீட்டிற்கு வேலைசெய்வதற்காக திரும்ப ஏனென்சியால் அனுப்பப்பட்டுள்ளார். அங்கு அவரது பெண்ணால் அஜிதா பல சித்திரவதைகளை அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.

அஜிதாவுக்கு ஒரு வேளை உணவு மட்டும் கொடுக்கப்பட்டதாகவும், அப்பெண் அஜிதாவை அடித்து துன்புறுத்தியது மட்டுமல்லாமல், மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது.

உயிரிழந்த அஜிதா
தருமபுரி: துர்நாற்றம் வீசியதால் எழுந்த சந்தேகம் - கதவை உடைத்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி

ஆனால் அஜிதா தான் துன்புறுத்தப்படுவது பற்றி தனது கணவரிடமோ அல்லது தனது பெண்ணான மிதுஷாவிடமோ கூறவில்லை. மாறாக தனது நிலமை குறித்து நண்பர்களிடமும், உறவினர்களிடமும் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சம்பவத்திற்கு ஒரு வாரம் முன்னதாக விஜயனுக்கு போன் செய்த அஜிதா, மே 18ம் தேதி தான் திரும்ப கேரளாவிற்கு வந்துவிடப்போவதாகவும், அதற்காக டிக்கெட் எடுத்துவிட்டதாகவும், கணவரிடம் தெரிவித்துள்ளார். ஆனால் அதன்பிறகு அஜிதாவிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை. சொன்னதுபோல 18-ம் தேதி அஜிதா கேரளாவிற்கு வரவும் இல்லை. இதையடுத்து, கவலையடைந்த விஜயன், எர்ணாகுளத்தில் உள்ள ஏனென்ஸியை அழைத்து தனது மனைவியைப் பற்றிய தகவல் கேட்டுள்ளார். ஆனால் ஏஜென்ஸி தரப்பில் விஜயனை மறுபடி அழைக்கிறேன் என்று கூறியதாக தெரிகிறது.

அதன்பிறகு வந்த தகவலில், அஜிதா 17-ம் தேதி தான் வேலை செய்த வீட்டில் தற்கொலை செய்துக்கொண்டதாக ஏனென்ஸி தரப்பில் கூறப்பட்டது. அதனை அடுத்து 21ம் தேதி அஜிதாவின் உடல் கேரளாவிற்கு வந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த விஜயன், ” எனது மனைவி தற்கொலை செய்துகொண்டிருக்கமாட்டார், அவரது இறப்பில் சந்தேகம் உள்ளது , அவரின் உடமைகள் எதுவும் எனக்கு திரும்ப கிடைக்கவில்லை. ஆகவே, எனது மனைவியின் மரணத்திற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படவேண்டும் ” என்று விஜயன் போலீசாரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com