கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: 'முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்' - மலாலா

கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: 'முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்' - மலாலா
கர்நாடக ஹிஜாப் சர்ச்சை: 'முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்' - மலாலா

ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது என்று நோபல் விருது பெற்ற மலாலா கருத்து தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர அரசுக் கல்லூரி அனுமதி மறுத்த விவகாரம் இந்திய அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லூரிக்கு ஒரு முஸ்லிம் மாணவி ஹிஜாபுடன் நுழைவதைக் கண்ட 50-க்கும் மேற்பட்ட இந்து மாணவர்கள், அந்தப் பெண்ணை நோக்கி `ஜெய் ஶ்ரீராம்' என கோஷமிட்டனர். அந்த பெண்ணும் பதிலுக்கு `அல்லாஹு அக்பர்' எனக் கோஷமிட, அவரை `ஜெய் ஶ்ரீராம்' என கோஷமிட்டபடி இந்து மாணவர்கள் தொடர்ந்து சென்றனர். பின்னர், அந்த மாணவியை ஆசிரியர் ஒருவர் பாதுகாப்பாக உள்ளே அழைத்துச் சென்றார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி பதற்றத்தை மேலும் அதிகரிக்கச் செய்தது.

இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் ஹிஜாப் அணியும் மாணவிகளுக்கு வகுப்பறைக்குள் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் அந்த மாணவிகளுக்கு ஆதரவாக சர்வதேச பெண்ணுரிமை செயல்பாட்டாளரும் நோபல் பரிசு பெற்றவருமான மலாலா யூசுஃப்சாய் குரல் கொடுத்துள்ளார். .

இந்த விவகாரத்தில் மலாலா நேற்று ட்விட் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர், "படிப்பு முக்கியமா ஹிஜாப் முக்கியமா என்று தேர்வு செய்ய கல்லூரி கட்டாயப்படுத்துகின்றன. ஹிஜாபை அணிந்தபடி மாணவிகள் பள்ளிக்கு செல்வதை மறுப்பது பயங்கரமானது. முஸ்லிம் பெண்களை ஒடுக்குவதை இந்திய தலைவர்கள் நிறுத்த வேண்டும்," என்று கூறியுள்ளார்.



மலாலாவின் ட்விட்டுக்கு பதிலளித்த பாஜக தேசிய செயலாளர் சிடி ரவி, 'இந்தியாவின் உள்விவகாரங்களில் தலையிடும் இவர் யார்?' என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: ”தேசியக்கொடி கம்பத்தில் காவிக்கொடி ஏற்றிய மாணவர்கள்”-கர்நாடகாவில் வன்முறை; போலீஸ் தடியடி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com