\
டெல்லியில் இன்று இரு வேறு இடங்களில் பயங்கர தீ விபத்து!!

டெல்லியில் இன்று இரு வேறு இடங்களில் பயங்கர தீ விபத்து!!

டெல்லியில் இன்று இரு வேறு இடங்களில் பயங்கர தீ விபத்து!!
Published on

டெல்லியில் இன்று இரு வேறு இடங்களில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது

டெல்லியின் துக்ளகாபாத் பகுதியில் உள்ள குடிசைப்பகுதியில் இன்று பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இன்று அதிகாலை 1 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், 250க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து நாசமானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் பாதிப்பு விவரங்கள் குறித்து முழுத்தகவல் இன்னும் வெளியாகவில்லை.  தீ விபத்து குறித்து தகவல் அளிக்கப்பட்டதும், 28க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தெரிவித்துள்ள துணை காவல் ஆணையர், எங்களுக்கு அதிகாலை 1 மணிக்கு தீவிபத்து குறித்து தகவல் வந்தது. பெரிய தீ விபத்து என்பதால் பாதிப்பு விவரம் குறித்து தற்போது ஏதும் கூறமுடியாது எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் டெல்லி கேஷவ்புரம் பகுதியில் உள்ள செருப்பு தயாரிப்பு தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. 15க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீயை அணைத்தன.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com