“அணு ஆயுதத்துறையில் இந்தியா அதிக வளர்ச்சி” - மன்மோகன் சிங்

“அணு ஆயுதத்துறையில் இந்தியா அதிக வளர்ச்சி” - மன்மோகன் சிங்

“அணு ஆயுதத்துறையில் இந்தியா அதிக வளர்ச்சி” - மன்மோகன் சிங்
Published on

அணு ஆயுதங்களின் மீதான தடையை பாதுகாக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஒய்வுபெற்ற இந்திய வெளியுறவு பணி அதிகாரி ராகேஷ் சூத் ‘21ஆம் நூற்றாண்டில் அணு ஆயுதங்கள்’ (Nuclear order in the 21st century) என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தின் வெளியிட்டு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் இந்தியாவின் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் கலந்துகொண்டார். இந்த விழாவில் உரையாற்றிய மன்மோகன் சிங் அணு ஆயுதங்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.

இதுகுறித்து மன்மோகன் சிங்,“அணு ஆயுதங்களின் பயன்பாட்டை இந்தியா எப்போதும் விரும்பியதில்லை. அந்தக் கொள்கையில் இந்தியா உறுதியாக உள்ளது. தற்போது அணு ஆயுதத்துறையில் வளர்ச்சி அதிகரித்து வருகின்றது. புதிய தொழில் நுட்பங்களின் பயன்பாடு அணு ஆயுதங்களில் செய்யப்பட்டு வருகின்றன. இதனால் தற்போது அணு ஆயுதங்களின் மீதான தடையை பாதுகாப்பதுதான் முக்கியமான ஒன்று.

மேலும் உலகளவில் இந்தியா மட்டும்தான் அணு ஆயுதங்களை அமைதியான முறையில் பயன்படுத்தி வந்த நாடு. அத்துடன் இந்தியா பல அணு ஆயுதங்களை தயாரித்திருந்தாலும் அவற்றை உபயோகப்படுத்தாமல் உறுதியாக நின்றது. அதேபோல பல ஆண்டுகளாக அணு ஆயுதங்களை முதலில் பயன்படுத்த மாட்டேன் என்ற கொள்கையில் இந்தியா உறுதியாகயுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com