பிரதமர் பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் முக்கிய அம்சங்கள்
இயற்கை பேரிடர் பாதிப்புகளால் ஏற்படும் பொருளாதார சிக்கல்களை ஈடு செய்ய பயிர்காப்பீடு திட்டம் வகை செய்கிறது. விவசாயிகளுக்காக, கடந்த ஆண்டு, பிரதமரின் புதிய பயிர்க் காப்பீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அதன் முக்கிய அம்சங்கள்
வறட்சி, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களாலோ அல்லது பூச்சித் தாக்குதல், காட்டு விலங்குகள் தாக்குதலாலோ பயிர்கள் பாதிக்கப்படும் பட்சத்தில் உரிய இழப்பீடு வழங்குவதே பிரதமரின் பயிர் காப்பீடு திட்டமாகும். இத்திட்டத்தில் சேரும் விவசாயிகள் பிரிமியம் தொகையில் 1.5 முதல் 2 சதவிகிதம் வரை செலுத்தினாலே போதுமானது. பணப்பயிர்களாக இருக்கும் பட்சத்தில் அதற்கு 5 சதவிகித பிரிமியம் செலுத்த வேண்டியிருக்கும். மீத தொகையை மத்திய அரசே செலுத்திவிடும். பயிர் பாதிக்கப்படும் பட்சத்தில் விவசாயிகளுக்கு முழு இழப்பீடும் கிடைக்கும். பாதிக்கப்பட்ட பயிர்களை ஸ்மார்ட்ஃபோனில் படம் எடுத்து அனுப்பினாலே இழப்பீடு தொகை பெறும் வசதிகளும் இத்திட்டத்தின் சிறப்பம்சங்களாகும். பயிர்க் கடன் பெற்ற விவசாயிகள் அனைவரும் தாமாகவே இத்திட்டத்தின் கீழ் வந்துவிடுவர்.
பயிர்க் கடன் பெறாத விவசாயிகள் அருகிலுள்ள வங்கிக் கிளைகள் மூலமாக பயிர்க் காப்பீடு வசதியை பெற விண்ணப்பிக்க முடியும். அல்லது காப்பீட்டு நிறுவனங்களின் இணையதளம் வாயிலாகவும் பயிர் காப்பீட்டு வசதியை விவசாயிகள் பெற முடியும். பிரதமரின் பயிர் காப்பீடு குறித்த முழுமையான விவரங்கள் பிரதான் மந்த்ரி ஃபஸல் பீமா யோஜனா என்ற வலைத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.