'காந்தி தான் சாவர்க்கரிடம் கருணை மனுவை தாக்கல் செய்யும்படி கோரினார்' - ராஜ்நாத் சிங்
மகாத்மா காந்தி தான் சாவர்க்கரிடம் கருணை மனுவை தாக்கல் செய்யும் படி கூறினார் என்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சாவர்க்கர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ''மகாத்மா காந்தியின் வேண்டுகோளின் பேரில் தான் பிரிட்டிஷ்காரர்களுக்கு சாவர்க்கர் கருணை மனு எழுதினார். மார்க்சிஸ்ட் மற்றும் லெனினின் சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள் சாவர்க்கரை பாசிஸ்ட் என்று தவறாக சித்தரித்து வருகின்றனர்'' என்றார்.
சாவர்க்கரை தேசியத்தின் அடையாளம் எனவும், வலுவான பாதுகாப்பு மற்றும் இராஜதந்திர கோட்பாட்டை நாட்டுக்கு வகுத்து கொடுத்தவர் சாவர்க்கர் எனவும் புகழாரம் சூட்டினார். மேலும் பேசிய அவர், ''அவர் இந்திய வரலாற்றின் அடையாளமாக என்றென்றும் நினைவுக்கூறப்படுவார். அவரைப்பற்றி தாழ்வாக கருவது ஏற்புடையதல்ல. அவர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் தீவிர தேசியவாதி'' என்று சாவர்க்கரை ராஜ்நாத் சிங் புகழ்ந்தார்.