தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்..!

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்..!
தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் இன்று கொண்டாட்டம்..!

தேசப்பிதா மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் விழா நாடெங்கும் இன்று கொண்டாடப்படுகிறது.

காந்திஜியின் பிறந்த நாளையொட்டி தலைநகர் டெல்லியிலும் அவர் பிறந்த குஜராத் மாநிலத்திலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. டெல்லியில் ராஜ்காட்டிலுள்ள காந்தி சமாதிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்த உள்ளனர். இதைத் தொடர்ந்து குஜராத் செல்லும் பிரதமர், அங்கு காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமத்திற்கு சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார்.

இதைத் தொடர்ந்து நாட்டை திறந்த வெளி கழிப்பிடங்கள் அற்றதாக அவர் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம தலைவர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட பல்துறை பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இதனிடையே மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளில் அவர் போதித்த உண்மை, அகிம்சை, எளிமை, நல்லிணக்கம் ஆகியவற்றை பின்பற்ற மக்கள் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கேட்டுக்கொண்டுள்ளார். சமூக ஒற்றுமை மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்கான பாதையை மகாத்மா காட்டிச்சென்றுள்ளதாகவும் குடியரசுத் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com