மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா?
மகாராஷ்டிரா துணை முதல்வர் பதவியில் இருந்து அஜித் பவார் ராஜினாமா செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதுகுறித்த கடிதத்தை அஜித் பவார் முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ்க்கு அனுப்பியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் இன்று மாலை 3.30 மணி மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். நாளை மாலை 5 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் ஃபட்னாவிஸ் செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். மகாராஷ்டிரா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆலோசனை செய்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்கள் அமித்ஷா, நிதின்கட்கரி ஆகியோர் உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசனை நடத்தினர். இதனிடையே ஏற்கெனவே அஜித் பவார் தேவேந்திர ஃபட்னாவிஸை சந்தித்து பேசினார்.