தேவிதாஸ் சுதாகர்
தேவிதாஸ் சுதாகர்கூகுள்

சாகித்ய அகடாமி ‘யுவ புராஸ்கர்’ விருதை வென்ற தையல்காரர்.. தடைகளை தாண்டி சாதித்த மராத்தி எழுத்தாளர்!

பாதித்தடைந்து வரும் ஒரு தையல்தொழிலுக்கும், ரெடிமேட் ஆடைகளுக்கும் இடையே உள்ள சம்பவங்களை மையமாக வைத்து ஒரு தையல் தொழிலாளி படும் சங்கடங்களை அடிப்படியாக வைத்து எழுதியதுதான் இந்த உஸ்வான் என்ற நூல்.

யுவ புராஸ்கர் விருது என்பது இலக்கியத்திற்கு சேவை புரியும் இளையோருக்கு வழங்கப்படும் விருதாகும். சாகித்திய அகாதமியினால் வழங்கப்படும் இந்த விருதை பெறுவதே ஒவ்வொரு இளம் எழுத்தாளர்களின் கனவு.

சமீபத்தில் 2024வது வருடத்திற்கான யுவ புராஸ்கர் விருது பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழில் லோகேஷ் ரகுராமனின் விஷ்ணு வந்தார் என்ற சிறுகதைக்கு யுவ புராஸ்கர் விருது வழங்கப்பட்டது.

மராத்தியில் தேவிதாஸ் சுதாகரின் உஸ்வான் என்ற நூலிற்கு யுவபுராஸ்கர் விருது வழங்கப்பட்டது. இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா? ஆச்சர்யம் இருக்கு, காரணம் இந்த தேவிதாஸ் இலக்கியவாதிகளின் வட்டத்திற்குள் இல்லாதவர். ஒரு தையல்கடைக்காரர். பாதிப்படைந்து வரும் ஒரு தையல்தொழிலுக்கும், ரெடிமேட் ஆடைகளுக்கும் இடையே உள்ள சம்பவங்களை மையமாக வைத்து ஒரு தையல் தொழிலாளி படும் சங்கடங்களை அடிப்படியாக வைத்து எழுதியதுதான் இந்த உஸ்வான் என்ற நூல். இதை எழுதியதற்காக தேவிதாஸ் சுதாகர் யுவ புராஸ்கர் விருதைப் பெற்றுள்ளார்.

தேவிதாஸ் சுதாகர்
மகாராஷ்டிரா| பழகும் போது காரை ரிவர்ஸ் எடுத்த இளம்பெண்.. மலையில் இருந்து விழுந்து பலி.. #ViralVideo

யார் இந்த தேவிதாஸ் சுதாகர்

தேவிதாஸ் சுதாகர் இளமையில் வறுமை கண்டவர். அதனால் அவரது பள்ளிப்படிபானது 7 வது வரையில் நின்றுவிட்டது. இவரது தந்தையும் இவரது தாத்தாவும் விவசாய கூலித்தொளிலாளிகள். சிலநேரங்களில் வேலை இருக்கும், பல நேரங்களில் வேலை கிடைக்காது. ஆகவே, இவர் தனது படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு பகல்நேரத்தில் வாட்ச் மேனாக வேலை செய்துவந்துள்ளார். இருப்பினும் ஏதாவது ஒரு டிகிரியாவது வாங்கவேண்டும் என்ற எண்ணத்தில் இரவு நேர பள்ளியில் சேர்ந்து தனது படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

சில காலம் கழித்து இவரது தந்தைக்கு கூலி வேலையும் கைக்கொடுக்காததால், சொந்தமாக தையல் இயந்திரம் வாங்கி, அருகில் இருப்பவர்களுக்கு தைத்துக்கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளார். தேவிதாஸ் சுதாகரும், தனது தந்தைக்கு உதவியாக தையல் தொழிலில் உதவி செய்து வந்துள்ளார். கூடவே எழுதுவதை இவர் பொழுதுபோக்காக கொண்டுள்ளார். பள்ளிப்படைப்பை முடித்ததும் ITI பாலிடெக்னிக்கில் சேர்ந்து மோட்டார் மெக்கானிக்கல் படிப்பை 2006ல் படித்து முடித்துள்ளார். ஆனால் படிப்பிற்கான வேலை இவருக்கு கிடைக்கவில்லை. ஆகையால் தனது தந்தையின் தொழிலான தையல் வேலையை செய்து வந்துள்ளார். இந்நிலையில் படிப்பின் மேல் கொண்ட ஆர்வத்தில் திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் MA வரலாறும் படித்துள்ளார்.

இதன் நடுவில் தையல் தொழில் செய்துக்கொண்டே ஆங்கிலம், மராத்தியில் தட்டச்சு தேர்வையும் முடித்துள்ளார். இவருக்கு கிடைக்கும் நேரங்களில் கிராமத்தில் இருந்த நூலகத்திற்கு சென்று அங்கிருக்கும் புத்தகங்களை படித்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார். தனது 18 வது வயதில் கவிதைகள் எழுதவும் கதைகள் எழுதவும் ஆரம்பித்துள்ளார். இவரின் கவிதை ஒன்று மராத்தி செய்திதாளில் வெளிவந்துள்ளது. அதுதான் இவரை எழுத்துதுறையில் அடுத்த கட்டத்திற்கு நகத்தியுள்ளது. இந்நிலையில் கொரானா காலகட்டத்தில் போதிய வருமானம் இல்லாமல் துன்பப்படவே... அச்சமயம் ஒரு தையல் தொழிலாளி வாழ்க்கையில் படும் துன்பங்களை அடிப்படையாகக்கொண்டு மராத்தியில் உஸ்வான் என்ற நூலை எழுதிமுடித்துள்ளார்.

சரி.., புத்தகம் எழுதியாகிவிட்டது. அடுத்த கட்டமாக அவருக்கு அதை என்ன செய்வது என்று தெரியவில்லை. எழுதியதை புத்தகமாக வடிவமைக்கலாம் என்று நினைத்தால் எந்த பதிப்பகத்தாரும் இவர் எழுதிய உஸ்வானை புத்தகமாக்க முன்வரவில்லை. அதன் பிறகு தானே தனது சொந்த செலவில் புத்தகமாக வெளியிடலாம் என்று நினைத்தவர் கையில் இருந்த 8000 ரூபாயை சேர்த்து எடுத்துக்கொண்டு சோலாப்பூர் புத்தகபதிப்பகம் சென்றார். அவர்களும் இவருக்கு 200 புத்தகம் போட்டு தந்துள்ளனர்.

அதில் சில புத்தகங்களை தனக்கு தெரிந்தவர்களுக்கு அனுப்பி வைத்தும் இருக்கிறார். அதில் மராத்தியில் மிகப்பிரபல எழுத்தாளர் ஒருவர், இவர் எழுதிய புத்தகத்தை பாராட்டியதுடன் புத்தகத்திற்கான தொகை ரூ.100 யும் இவருக்கு அனுப்பி வைத்துள்ளார். எழுத்தாளரின் பாராட்டு கடிதத்தை இவர் லேமினேட்செய்து வைத்து இருப்பதாக கூறியிருக்கிறார்.

தற்பொழுது இந்த நாவலுக்கு மிகப்பெரிய விருது கிடைத்திருப்பது இவருக்கு மட்டுமல்ல.... எழுத்துலகில் அங்கீகாரத்திற்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. இப்பொழுது இவர் வேலையில்லா பட்டதாரி இளைஞர்களைப் பற்றிய நாவலை எழுதி வந்துக்கொண்டிருக்கிறார். இவருக்கு நாம் மொழிதாண்டிய வாழ்த்துக்களைக் கூறிக்கொள்வதில் பெருமிதம் கொள்ளலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com