இந்தியா
மகாராஷ்டிராவில் ஏப். 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு : உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிராவில் ஏப். 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு : உத்தவ் தாக்கரே
மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏப்ரல் 30 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிப்பு செய்யப்பட்டுவதாக முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். ஏற்கனவே ஒடிசா, பஞ்சாப் மாநிலங்களில் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக பிரதமர் மோடி இன்று இரவு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது மகராஷ்டிரா மாநில அரசு ஊரடங்கை நீட்டித்துள்ளது. நாட்டிலே கொரோனாவால் அதிக பாதிப்புகளை உடைய மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது குறிப்பிடத்தக்கது.