இந்தியா
தனியார் மருத்துவமனைகளில் உள்ள 80% படுக்கைகளைக் கட்டுப்பாட்டில் எடுத்தது மகாராஷ்டிர அரசு
தனியார் மருத்துவமனைகளில் உள்ள 80% படுக்கைகளைக் கட்டுப்பாட்டில் எடுத்தது மகாராஷ்டிர அரசு
அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் உள்ள படுக்கைகளில் 80 சதவீதத்தை மகாராஷ்டிரா அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்தது.
ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை மாநிலத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனை படுக்கைகளில் 80 சதவீதத்தை மகாராஷ்டிரா அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளது. ஏனெனில் இந்த மாநிலத்தில் இதுவரை கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 40,000 ஐ தொட்டுள்ளது. இந்தத் தொகை நாட்டிலேயே அதிகமாகும். ஆகவே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது உத்தவ் தாக்ரே தலைமையிலான அரசு.
இது தொடர்பான ஆணையை மாநில முதல்வர் உத்தவ் தாக்ரே நேற்று இரவு பிறப்பித்துள்ளார். அதில் கொரோனா தொடர்பான சிகிச்சைக்கு எவ்வளவு கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்பது உட்படப் பல விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 80 சதவீதம் தனியார் மருத்துவமனைகளை அரசுக் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் மீதமுள்ள 20 சதவீத படுக்கைகளைத் தனியார் மருத்துவமனைகள் உபயோகித்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான கட்டணங்களைத் தனியார் மருத்துவமனைகளே முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைகள் மீதாகப் பல்வேறு புகார் எழுந்த நிலையில் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.