புனே| இந்து மாணவிகளிடம் பேசிய முஸ்லிம் இளைஞரை 'லவ் ஜிகாத் செய்கிறாயா?' எனக்கூறி தாக்கிய கும்பல்!

மகாராஷ்டிராவில் 19 வயது முஸ்லிம் மாணவர் ஒருவர், தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜுனைத் ஜமாதர்
ஜுனைத் ஜமாதர் ட்விட்டர்

மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் சாவித்ரிபாய் பூலே என்ற பல்கலைக்கழகம் உள்ளது. இந்தப் பல்கலைக்கழகத்தில் படித்துவரும் ஜுனைத் ஜமாதர் என்ற 19 வயது முஸ்லிம் இளைஞர், கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி, இரண்டு இந்து மத மாணவிகளுடன் பேசிக் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அங்குவந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் மாணவர் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், “கடந்த ஞாயிற்றுக்கிழமை மதிய உணவுக்குப் பிறகு இரண்டு மாணவிகளுடன் தாக்கப்பட்ட மாணவர் பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது, இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத 5 நபர்கள் ’இந்து மாணவிகளுடன் பேசி லவ் ஜிகாத் செய்கிறாயா’ எனக் கூறி தாக்கியுள்ளனர் என அந்த மாணவர் புகார் அளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அவரது தந்தையையும் அழைத்து அவர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அப்போது, ‘மகனின் பல்கலைக்கழக வருகையை உடனே ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால், அவரது உடல் பையில் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும்’ என எச்சரித்தாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

முன்னதாக, இந்தச் சம்பவம் தொடர்பாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட வீடியோ ஒன்றில், அடையாளம் தெரியாத ஐந்து நபர்கள் தன்னை, தடுத்து நிறுத்தி பல்கலைக்கழக அடையாள அட்டையைக் காண்பிக்கச் சொன்னதாகவும், அதைப் பார்த்த பின்பு, அவர்கள் தாம் முஸ்லிம் என தெரிந்ததும், அந்த நபர்கள் தன்மீது ’லவ் ஜிகாத்’ எனக் குற்றம்சாட்டி தாக்கியதாகவும், இந்த வளாகத்தில் மேலும் உன்னைக் கண்டால் கொன்றுவிடுவதாகவும் அவர்கள் மிரட்டியதாக ஜுனைத் ஜமாதர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: புதிய உச்சம் தொட்டது இந்திய குடும்பங்களின் கடன் மதிப்பு.. குறைந்தது சேமிப்பு.. ஆய்வில் தகவல்!

ஜுனைத் ஜமாதர்
மகாராஷ்டிரா| சிகரெட் பிடித்த இளம்பெண்கள்; உற்றுப் பார்த்த நபர்.. இறுதியில் கொலையில் முடிந்த கொடூரம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com