மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் ரஞ்சித் பாட்டிலின் தந்தை வித்தல்ராவ் பாட்டீல், பள்ளி ஊழியர் ஒருவரை கன்னத்தில் அறையும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் அகோலா மாவட்டத்தில் உள்ள முர்திஜாபூர் கிராமத்தில் வித்தல்ராவ் பாட்டீலின் அறக்கட்டளை சார்பில் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. அப்பள்ளிக்கு மாணவர் சேர்க்கை குறைந்து, அருகேயுள்ள பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் அப்பள்ளியைப் பார்வையிடச் சென்ற அவர், அங்குள்ள ஊழியர் ஒருவரை கன்னத்தில் அறையும் காட்சி இணையதளத்தில் வெளியானது.
இதுதொடர்பாக வித்தல்ராவ் பாட்டீல் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டை அமைச்சர் ரஞ்சித் பாட்டில் மறுத்துள்ளார். போலீஸ் விசாரணைக்குப் பிறகு உண்மை தெரியவரும் எனக் கூறியுள்ளார்.