\
மகாராஷ்டிரா: கொரோனா நோயாளி என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக் கொலை..!

மகாராஷ்டிரா: கொரோனா நோயாளி என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக் கொலை..!

மகாராஷ்டிரா: கொரோனா நோயாளி என்ற சந்தேகத்தின் பேரில் ஒருவர் அடித்துக் கொலை..!
Published on

மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளி என்ற சந்தேகத்தின்பேரில் தாக்கப்பட்ட நபர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் கல்யாண் நகரைச் சேர்ந்தவர் கணேஷ் குப்தா(34). ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை காலை கணேஷ் குப்தா சில அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்காக தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அப்போது பாதுகாப்பு பணியில் போலீசார் இருந்ததை கண்ட கணேஷ் குப்தா வேறு வழியாக சென்றுள்ளார். நடந்து செல்லும் போது அவர் இருமிக் கொண்டே சென்றதாக தெரிகிறது.

இதைப்பார்த்த சிலர் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அந்த நபர்கள் அவரை ஒரு கொரோனா நோயாளி என்று சந்தேகித்து தாக்கியதாகவும் இதனால் அவர் ஒரு சாக்கடைப் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்ததாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து இறந்தவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஒரு தற்செயலான மரணம் என்றே இதுவரை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக கடக்பாடா காவல்நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com