மகாராஷ்டிராவில் அனைத்து மதவழிபாட்டு தலங்களும் நாளை திறப்பு
முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் அனைத்து கோவிட்-19 விதிமுறைகளும் மத வழிபாட்டு தலங்களில் நடைமுறையில் இருக்கும் என்று மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
நாளை முதல் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் மீண்டும் திறப்பதாக அம்மாநில அரசு நேற்று அறிவித்தது. முகக்கவசம், சமூக இடைவெளி மற்றும் அனைத்து கோவிட்-19 விதிமுறைகளும் மத வழிபாட்டு தலங்களில் நடைமுறையில் இருக்கும் என்று உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட எட்டு மாதங்களுக்கு பிறகு மகாராஷ்டிராவில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்படுகிறது.
பெரும்பாலான மாநிலங்களிலும், பல வாரங்களுக்கு முன்பே மதவழிபாட்டு தலங்களைத் திறக்கப்பட்டிருந்தாலும், மகாராஷ்டிராவில் கோவிட்-19 அச்சுறுத்தல் காரணமாக எதிர்க்கட்சிகளின் அழுத்தங்களுக்கு இடையிலும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே எச்சரிக்கையாக வழிபாட்டு தலங்களை மீண்டும் திறக்கவில்லை.
மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 4132 கொரோனா வழக்குகள் பதிவாகியுள்ளது, இதுவரை மொத்தம் 17,40,461 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 45,809 பேர். தற்போது கொரொனா காரணமாக மாநிலத்தில் 84,082 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.