இந்தியா
மகாராஷ்டிராவில் அக்.4 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு
மகாராஷ்டிராவில் அக்.4 முதல் பள்ளிகள் திறப்பு - மாநில அரசு அறிவிப்பு
மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்.4-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டன. தற்போது பல்வேறு மாநிலங்கள் தங்கள் மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பை பொறுத்து பள்ளி கல்லூரிகளை திறந்து வருகின்றன.
அந்த வகையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அக்டோபர் 4ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வர்ஷா கெய்வாட் தெரிவித்துள்ளார். மேலும், கிராமப்புறங்களில் 5 முதல் 12ஆம் வகுப்பு வரையும், நகர்ப்புறங்களில் 8 முதல் 12ஆம் வகுப்பு வரையும் திறப்பு என அவர் கூறியுள்ளார்.