“மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியைத்தர முடியும்”- பிருத்விராஜ் சவான்

“மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியைத்தர முடியும்”- பிருத்விராஜ் சவான்

“மகாராஷ்டிராவில் நிலையான ஆட்சியைத்தர முடியும்”- பிருத்விராஜ் சவான்
Published on

மகாராஷ்டிராவில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா கூட்டணியால் நிலையான ஆட்சியைத்தர முடியும் என்று முன்னாள் முதலமைச்சர்  பிருத்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பாக காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் தலைவர்கள் டெல்லியில் நேற்றுகூடி ஆலோசனை நடத்தினர். நீண்டநேரம் நீடித்த பேச்சுக்குப் பின்னர், காங்கிரஸைச் சேர்ந்த முன்னாள் முதலமைச்சர் பிருத்விராஜ் சவானும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் நவாப் மாலிக்கும் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தனர். 

அப்போது மூன்று கட்சிகளும் ஓரணியில் திரளாமல் புதிய அரசு அமைக்க முடியாது என்று மாலிக் தெரிவித்தார். இதன்மூலம் கொள்கை ரீதியிலாக நேர் எதிர் திசையில் இருக்கும் சிவசேனாவுடன் கைகோர்ப்பதை காங்கிரஸ் குழப்பமின்றி முதன்முறையாக ஆணித்தரமாக வெளிப்படுத்தியிருப்பதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.

முதலமைச்சர் பதவியை முதல் இரண்டரை ஆண்டுகளுக்கு சிவசேனாவும் அடுத்த இரண்டரை வருடங்கள் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் சுழற்சி முறையில் வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஐந்து ஆண்டுகளுக்கும் துணை முதலமைச்சர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்குவது என முடிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதனிடையே வரும் 30-ஆம் தேதிக்குள் மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைந்துவிடும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஒருவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com